தெற்கு தில்லியின் சத்யா நிகேதன் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான 5 மாடி தனியார் விடுதி திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.
இடிந்து விழுந்த கட்டடம் பழைமையான கட்டடம் என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தீயணைப்புத் துறையினரும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் 3 பேர் மீட்பு.
மீட்புப் பணியை பார்வையிடும் பொதுமக்கள்.
மீட்புப் பணியை ஆய்வு செய்து அருகில் அமர்ந்திருக்கும் தில்லி முதல்வர் ரேகா குப்தா.