முருங்கைக் காயை நறுக்கி அப்படியே சாம்பாரில் போடக்கூடாது. இரண்டாகக் கீறிப் போட்டால் மணமும் சுவையாக இருக்கும். குழம்பும் திக்காக இருக்கும்.
காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டி, கூட்டு, குழம்பு வைத்தால் அதிக அளவில் சத்துகள் வீணாகாது.
காய்ச்சிய பாலின் ஆடை மஞ்சளாக இருந்தால், அது பசும்பால், வெள்ளையாக இருந்தால் அது எருமைப்பால்.
வெள்ளரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றின் தோலின் அடியிலும் அதிக சத்துகள் உள்ளன. தோலை மெலிதாகச் சீவினால் போதுமானது.
காய்கறிகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடுவதைவிட நீர் கொதித்தவுடன் அதில் காய்கறிகளைப் போட்டு வேக வையுங்கள். இப்படிச் செய்தால் சத்துகள் அதிகம் வீணாகாது.
காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடலாம். அரைவேக்காட்டில்கூடச் சாப்பிடலாம். காய்கறிகளை அளவுக்கு அதிகமாக வேகவிடுவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல.
வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால் அவை மறைந்துவிடும்.