தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற 7 வழிகள்!

தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற நாள்தோறும் ஒரே நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் எழுந்து, படித்து, இரவில் ஒரே நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்.

படிப்பதை புரிந்துகொள்ளுங்கள். மனப்பாடம் செய்யாதீர்கள். புரிந்துகொண்டால் எப்படி கேள்வி கேட்டாலும் பதிலளிக்க முடியும். இதுவரை மனப்பாடம் செய்தால், படிக்கும் முறையை மாற்றவும்.

கடந்த ஆண்டு வினாத்தாள்களை எடுத்து பயிற்சி செய்து பாருங்கள். முதலில், தேர்வு குறித்த அச்சம் விலகும், வினாத்தாளை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று அறியலாம்.

படிக்கும்போதெல்லாம் சிறு குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். படிக்க நேரம் இல்லாவிட்டாலும் தேர்வுக்கு முன் அதைப் பார்த்துக் கொள்ளலாம்.

தொடர்ந்து பல மணி நேரம் படிக்காமல் அவ்வப்போது சிறு இடைவேளை விடுத்து நடப்பது, சிற்றுண்டி சாப்பிடுவது நல்லது.

படிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட படித்ததை மீண்டும் சரிபார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

அதிக நேரம் கண் விழித்து படிப்பது படிப்புக்கும் நல்லதல்ல. சரியான நேரத்தில் உறங்குங்கள். உடல்நிலை மிகவும் முக்கியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரி