காதலர் தினம்! ஒரு வாரக் கொண்டாட்டம்!

காதலைக் கொண்டாடாத நாடுகளே இல்லை என்ற நிலையில், காதலர் தினத்தை மட்டும் புறக்கணித்து விட முடியுமா என்ன?

மனதுக்குள் காதலித்துக் கொண்டு இதயம் முரளி போல சொல்லாமல் இருப்பவர்களுக்கும், காதலிக்கிறார் என்று தெரியும், இதுவரை சொல்லவில்லை என்று ஆதங்கத்தில் இருப்போருக்கும், லவ் பிரபோஸல் முதல் லவ் பிரேக் வரை பல விஷயத்துக்கும் பிப்ரவரி 14ம் தேதி மிகக் கச்சிதமான நாளாக அமைந்துவிடுகிறது.

பலரும் பிப்ரவரி 14ம் தேதியை எப்படி கொண்டாடுவது என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், காதலர் தினம் என்பது ஒரு நாள் கொண்டாட்டமல்ல, இது ஒரு வாரக் கொண்டாட்டம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இந்த கொண்டாட்டம் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நீள்கிறது.

பிப்ரவரி 7 - ரோஜாக்கள் தினம்

பிப்ரவரி 8 - காதலைச் சொல்லும் தினம்காதலைச் சொன்னவர்களும் சரி, சொல்லாதவர்களும் சரி இன்று உங்கள் இணையரிடம் நீங்கள் கொண்ட காதலை மிக அழகாக வெளிப்படுத்தலாம்.

பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்உங்கள் காதலில் ஒரு இனிமையை ஏற்படுத்தும் வகையில், இணையருக்கு சாக்லேட்டை பரிசளிக்கும் தினம் இது. இப்போதுதான் இதய வடிவில் சாக்லேட் பாக்ஸ் முதல் இதய வடிவ சாக்லேட்டுகளும் விற்பனைக்கு வருகின்றனவே.

பிப்ரவரி 10 - டெட்டி டேபலருக்கும் பிடித்த பொம்மையாக கரடி பொம்மைகள் (டெட்டி பியர்) விளங்குகின்றன. அவற்றை பரிசளித்து மகிழலாம்.

பிப்ரவரி 11 - வாக்குறுதி தினம் இருவரும் காதலில் இணைந்து இணை பிரியாமல் வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் தினமாக இது அமைந்துள்ளது.

பிப்ரவரி 12 - முத்த தினம் காதலின் அழகிய உணர்வை மிக மென்மையாக வெளிப்படுத்தும் வகையில் இந்த தினத்தை காதலர்கள் முத்தமிட்டு வெளிப்படுத்துகிறார்கள்.

பிப்ரவரி 13 - அணைத்தல் தினம்தங்களுக்குள் இருக்கும் எந்த வலியையும் எந்தக் கவலையையும் மறக்கச் செய்யும் ஆற்றல் அணைத்தலுக்கு உள்ளது. அதைக் கொண்டாடும் தினம்.

பிப்ரவரி 14 - காதலர் தினம்காதலிப்பவர்களுக்கு இந்த நாளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகமே மிக உற்சாகமாகக் கொண்டாடும் நாள். காதலிப்பவர்கள் மட்டுமல்ல, தம்பதியரும் காதலர் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப் ஸ்டோரிஸ்