இணையதளச் செய்திப் பிரிவு
வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வாரம் 2 தினங்களாவது வெல்லம் சேர்த்த உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் கலந்தால், சாம்பார் சிவப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.
தோசைக்கு மாவு அரைக்கும்போது, ஊற வைத்த சோயா பீன்ûஸ சேர்த்து அரைத்தால், தோசை மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
ஒரு தேக்கரண்டி தனியா, 6 மிளகு இவற்றை அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வறுத்துப் பொடி செய்து, புளிக்கரைசலில் சேர்க்காமல் தனியாக சாதம் பிசையும்போது தேவையான அளவு சேர்த்து, புளிக்கரைசலுடன் கலந்து பிசைந்தால் ருசியான பெருமாள் கோயில் புளியோதரை ரெடி.
மீந்துப் போன பனீரை வெந்நீரில் நனைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் பல நாள்கள் கெடாமல் இருக்கும்.
தயிர் விரைவாக புளிக்க பால் பாதி சூடாக இருக்கும்போதே, உறை ஊற்றி வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.