இணையதளச் செய்திப் பிரிவு
வெளியே கிளம்பும் முன் போடும் மேக்-அப் நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்றால் சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மேக்-அப் போடுவதற்கு முன்பு, முகத்தை நன்கு சுத்தம் செய்வதும், மாஸ்சரைசர் பயன்படுத்துவதும் அவசியம்.
முதலில், சருமத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய்ப் பசை, அழுக்கை நீக்க இது உதவும். பிறகு போடும் மேக்-அப் சருமத்தை வறட்சியடையாமல் செய்ய மாஸ்சரைசர் அவசியம்.
நீண்ட நேரத்துக்கு மேக்-அப் இருக்க வேண்டும் என்றால், அதற்கு சருமத்துக்கு ஏற்ற பிரைமரை தேர்வு செய்ய வேண்டும்.
எண்ணெய் பசை கொண்ட சருமத்துக்கு மேட் பிரைமர் சரியான தேர்வாக இருக்கும். ஹைட்ரேடிங் பிரைமர்கள் வறண்ட சருமத்துக்கு ஏற்றதாக இருக்கும்.
பொதுவாக ஃபவுண்டேஷன்கள், தோலின் நிறத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். அதிலும் ஸ்மட்ஜ்-ப்ரூஃப் மற்றும் வாட்டர்-ப்ரூஃப் ஐலைனர்கள், மஸ்கரா போன்றவை கண்களை கருமையாக்காமல் இருக்கும்.
க்ரீஸ் - ப்ரூஃப் கன்சீலர்கள் மேக்-அப் முழுமையடைய உதவும்.
பெரும்பாலும் செட்டிங் ஸ்ப்ரேவை கடைசியாகத்தான் பலரும் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், நீண்ட நேரம் மேக்-அப் இருக்க வேண்டும் என்றால், ஒன்றிரண்டு க்ரீம்களைப் பயன்படுத்தியதும் இடை இடையே செட்டிங் ஸ்ப்ரே செய்யலாம். இது அதிகப்படியான எண்ணெய் போன்வற்றை குறைக்கும். சில இடங்களில் அதிகடிப்பான பவுடர்களையும் குறைக்க உதவும்.
எல்லா மேக்-அப்பும் முடிந்ததும், இறுதியாக நீங்கள் பயன்படுத்தும் முகப் பவுடரை கண்களுக்குக் கீழே, தாடை ஆகிய பகுதிகளில் அடித்து பிறகு அதனை மென்மையாக துடைத்தெடுத்தால் முகம் பொலிவாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.