இணையதளச் செய்திப் பிரிவு
பட்டுப் புடவைகளுக்குப் பெயர்போனது காஞ்சிபுரம் பட்டு. இதில் பயன்படுத்தப்படும் ஜரிகை, தங்கம் அல்லது வெள்ளிப் பயன்படுத்தி நெய்யப்படுவதால் இதற்கு அவ்வளவு சிறப்புகள்.
ஒரு கடையில் விற்பனையாகும் பட்டுப் புடவை உண்மையான காஞ்சி பட்டுத்தானா என்பதை அறிய, பட்டு நூலின் நுணியை கையில் திரித்துப் பார்த்தால் அதில் சிவப்பு-செம்பு அல்லது வெள்ளி இழை தெரிந்தால் அது உண்மையான பட்டு.
ஜரிகை டிசைன் பகுதியை கையால் தடவிப் பார்த்தால் மென்மையாக இல்லாமல், சிக்கலான டிசைன் வடிவம் கையில் தென்படும்.
சில உண்மையான காஞ்சி புடவைகள், பள்ளு தனியாக நெய்யப்பட்டு, உடல் பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த இழை தனித்துக் காட்டும்.
உண்மையான பட்டுப் புடவை என்றால் ரூ.5 ஆயிரத்துக்குக் குறையாமல் விற்பனை செய்யப்படும். புடவை சற்று கனமாக இருக்கும்.
உண்மையான பட்டுப் புடவைகள் என்பதை அறிய தற்போது சில்க் மார்க் குறியீடுகள் வந்துவிட்டன. அந்த குறியீடுகள் கொண்ட புடவைகளை தேர்வு செய்தும் வாங்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.