இணையதளச் செய்திப் பிரிவு
அதிகம் உங்களைப் பற்றி பேச வேண்டாம். நம்மைப் பற்றி அதிகம் அறியாதவரைதான் மதிப்பு.
ஒருவர் பேசும்போது புரிந்து கொள்ளுங்கள். பதில் பேச வேண்டும் என்பது அவசியமில்லை. புரிதலே அவசியம்.
அமைதியாக பேசுவது நல்லது. கோபப்படும்போது பேசாமல் இருப்பது மிகவும் நல்லது.
ஒரு விழாவுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் பெரிய மனிதர்களை மட்டும் பார்த்து புன்னகைப்பது, பேசுவது இல்லாமல் அனைவரிடமும் பேசுங்கள்.
ஒருவர் என்ன சொன்னார் என்பதைக்கூட மறந்துவிடுவார்கள், நம்மை ஒருவர் எப்படி நடத்தினார் என்பதை மனிதர்கள் எப்போதும் மறப்பதில்லை.
ஒருவர் தன்னுடைய வாழ்க்கை பற்றி பேசும்போது குறுக்கிடாதீர்கள். வேறு வேலை இருந்தாலும் அவர் பேசும்வரை பொறுமையாக இருங்கள்.
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நடிக்க வேண்டாம்.
யாராவது உங்களிடம் கிசுகிசு பேசினால், உங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் புரளி பேசுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாம் நடந்து கொள்வதை வைத்தே மற்றவர்கள் கொடுக்கும் மரியாதை அமைகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.