தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் நாள் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தந்தையர் நாள்.

காதலர் தினம், நண்பர்கள் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம் போல் அல்லாமல், தந்தையம் தினம் பொதுவாக எப்போது கொண்டாடப்படுகிறது என்பது முன்கூட்டியே தெரிவதில்லை. தந்தையம் தினம் இன்று என அன்றைய தினம் சில பதிவுகளைப் பார்த்துத்தான் பெரும்பாலானோர் அறிந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு முன்கூட்டியே அறிந்து கொண்டிருப்பதால் தந்தையர்களுக்கு வழங்கம் போல ஸ்டேட்டஸ் போட்டு விட்டுவிடாமல், அவர்களுக்கு என சிறந்த பரிசைத் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கவும், கேக் வெட்டிக் கொண்டாட நினைத்தால் அதற்கு திட்டமிடவும் போதிய அவகாசம் இருக்கிறது.

இந்த ஆண்டு அடுத்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படவிருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, இணையத்தில் தேடினால், தந்தையர்களுக்குக் கொடுக்க ஏராளமான பரிசு பொருள்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

பெயர் அச்சிட்ட பேனா முதல் பர்ஸ், கைக்கடிகாரம், சட்டை என பலவற்றில் தந்தையருக்குப் பிடித்ததைத் தெரிவு செய்து வாங்கிக் கொடுக்கலாம்.

தனக்காக பெரிதாக எதையும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள், தனக்காக வாழத் தெரியாத தந்தைகளுக்கான நாளில், அவர்கள் மிகவும் விரும்வும் எந்தவொரு விஷயத்தை செய்தாலும் அது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

சிலர் தங்களுடன் பிள்ளைகள் நேரத்தை செலவிடவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் அந்த நாளை செலவிடுவதுகூட, அவர்களுக்கு சிறந்த பரிசாக இருக்கலாம், ஆனால், அந்த நாளை தொடங்கும்போது ஒரு பரிசுடன் தொடங்குவதுதான் சிறந்தது.

வெகுநாளாக அவர்கள் தேடிக் கொண்டிருந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுக்கலாம். நாளிதழ் படிப்பவர்கள் என்றால் 6 மாதம், ஓராண்டுக்கு நாளிதழ் சந்தா செலுத்திக் கொடுக்கலாம்.

கேட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களது நெருங்கிய நண்பர்களை வீட்டுக்கு வரவழைக்கலாம்.

நடைப்பயணம் செல்பவராக இருந்தால் ஷு, கையில் எடுத்துச் செல்லும் குடிநீர் பாட்டில், அழகிய டி-ஷர்ட் வாங்கிக் கொடுக்கலாம்.

மேலும் வெப்ஸ்டோரிகளுக்கு...