சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ளது காமாட்சி அம்பாள் உடனுறை வரமுக்தீஸ்வரர் திருக்கோயில்.
2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் சமீபத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பாலமுருகன், குபேர விநாயகர், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சன்னதிகள் உள்ளன.
ராஜகோபுரம் நான்கு நிலைகளை கொண்ட, 165 அடி உயரம் உடையது. இதில், 216 சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சக்தி வாய்ந்த வாயு தலமாகும். இங்கு, சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.
சித்தர்கள் தவமிருந்த தலம்.
திருமணத் தடை, குழந்தைப் பாக்கியம், ஜாதக தோஷம் என சலக தோஷங்களும் நீங்கும் திருத்தலம்.
கோயில் தலவிருட்சம்.