திருப்பதி லட்டுக்கு பிறந்த நாள்!

திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை 310 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் தரிசனம் முடித்து பக்தியுடன் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனா். இத்தகைய லட்டு பிரசாதம் வழங்கப்படும் பணி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதியுடன் 310 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

திருமலை லட்டு பிரசாதத்தின் 310 ஆண்டு கால வரலாறு நிறைவடைந்ததையொட்டி, ஒரு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட வேண்டியதன் அவசியத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

1715 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கும் சேவை தொடங்கப்பட்டது என்று வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரி