முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதும், நன்றி செலுத்தும் புண்ணிய நாளாகவும் அமாவாசை திதி அமைந்திருக்குகிறது.
அதிலும் ஆடி அமாவாசை நாள் மிகவும் உன்னதமான நாள். ஆகஸ்ட் 12ஆம் தேதி புதன்கிழமை ஆடி அமாவாசை வருகிறது.
நாளை அதிகாலை 02.11 மணி முதல் நள்ளிரவு 12.16 மணி வரை அமாவாசை திதி. கோயில்களில் நாளை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரமாக காலை 6 - 8.30 மணியும், மதியம் 10.40 முதல் பகல் 12.13 மணி வரையும் உகந்த நேரமாகக் கருதப்படுகிறது.
வீட்டில் வழிபடும் முறை.. வீட்டில் வழக்கம் போல பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவு படைத்து வழிபட வேண்டும். பூஜைக்குப் பின் உணவை காகத்துக்கு வைக்க வேண்டும். பிறகு, முன்னோர்களுக்குப் படைத்த உணவை சாப்பிடலாம்.