இணையதளச் செய்திப் பிரிவு
உத்திராயண புண்ணியகாலம், தட்சிணாயன புண்ணியகாலம் என்பது போல் விஷ்ணுபதி புண்ணியகாலமும் உள்ளது.
இது பரவலாக அறியப்படாத ஒன்றாக இருந்தது. அண்மைக் காலமாக ஜோதிடர்கள் இது பற்றி மக்களுக்கு விடியோக்கள் மூலம் தெரிவித்து வருவதால் பலரும் இந்த நாள்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடத் தொடங்கியிருக்கிறார்கள்.
வருடத்தில் வைகாசி 1-ஆம் தேதி, ஆவணி 1-ஆம் தேதி, காா்த்திகை 1-ஆம் தேதி மற்றும் மாசி 1-ஆம் தேதி ஆகிய நான்கு நாள்களும் அதாவது, இந்த மாதங்களின் தொடக்க நாள்கள் விஷ்ணுபதி புண்ணியகால நாள்களாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றனவாம்.
இந்த நாள்களில் அதிகாலை 1.30 மணி முதல் 10 மணிக்குள் பெருமாள் கோயிலுக்குச் சென்று மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்தால், மிகப்பெரிய முன்னேற்றம் அடைவா் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த நாள்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 27 முறை பெருமாளின் கருவறையையும், கொடிமரத்தோடு சுற்றி வழிபாடு செய்கிறார்கள்.
27 முறை என்பதைக் குறிக்க, கையில் 27 பூக்களோடு வளம் வந்து, ஒவ்வொரு சுற்றும் நிறைவடையும்போது கொடிமரத்தில் ஒரு பூவை வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
2026ஆம் ஆண்டில் விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும் நாள்கள் பற்றி பலருக்கும் அறிந்துகொள்ள விருப்பம் உள்ளது.
2026-ஆம் ஆண்டில் பிப்ரவரி 13ஆம் தேதியும், மே 15ஆம் தேதியும், ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதியும், நவம்பர் மாதம் 17ஆம் தேதியும் விஷ்ணுபதி புண்ணிய நாள்கள் என்று கூறப்படுகிறது.
கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விளக்கேற்றி, பச்சை திராட்சை வைத்து பெருமாளை வழிபடலாம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
எனினும், இதுபற்றி அருகில் உள்ள கோயில்களில் பக்தர்கள் கேட்டறிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.