இணையதளச் செய்திப் பிரிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால், கோயில் நடை இன்று அடைக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, ராமநாதசுவாமி திருக்கோயில் நடை செவ்வாய்க்கிழமை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.