மகா சிவராத்திரி! வீட்டிலிருந்தே என்ன செய்யலாம்?

இணையதளச் செய்திப் பிரிவு

மகா சிவராத்திரியன்று பூமியானது பெரிய நீள்வட்டப் பாதையிலிருந்து சிறிய நீளவட்டப் பகுதிக்கு மாறுகிறது.

DPS

பிரம்மாண்டத்தில் நிறைந்துள்ள மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குக் காரணமாக உள்ள ஈதர் என்னும் கதிர்வீச்சு எப்போதும் பூமியை நோக்கி இருவகைகளில் பாய்ந்தவாறு உள்ளது. நேராகவும் மற்றும் சுருள் வட்ட வடிவிலும் வருகிறது. மகா சிவராத்திரியன்று இது சுருள் வட்ட வடிவில் பாய்ந்து வருகிறது.

DPS

இந்தக் கதிர் வீச்சானது மிகுந்த ஆற்றலுடையது. இது மனித உடலிலே முதுகுத் தண்டின் வழியாகப் பாய்ந்து பலவித நன்மைகளை ஏற்படுத்துகிறது. உடல் மன ஆற்றலை அதிகரிக்கச் செய்து, சுறுசுறுப்பையும் புத்துணர்வையும் அளிக்கிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றலை மிகுதிப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை எய்துகிறது. மன உளைச்சல், மனச்சோர்வு ஏற்படுவதைத் தடுக்கிறது. சுரப்பிகளைச் சரியாக இயங்கச் செய்கிறது.

இந் நாளில் இயன்றால் வெட்ட வெளியிலே (வீட்டின் மாடிப் பகுதியில்) சப்பணம் இட்டு, முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு அமர்ந்து கொள்ளலாம். (இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தவாறும் செய்யலாம்) தியானம் செய்யவேண்டும்.

இரவு பதினோரு மணிமுதல் இரண்டு மணிவரையில் தியானம் மேற்கொள்வது பலவகைகளிலும் நன்மையை அளிக்க வல்லதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரி