பிப். 1 தைப்பூசம்! அறுபடை வீடுகள்!!

இணையதளச் செய்திப் பிரிவு

அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முதல் படை வீடாகும்.

மதுரைக்கு தென்மேற்கில் அமைந்துள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையை திருமணம் செய்தகொண்ட நிகழ்வு நடத்தாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்தக் கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் இரண்டாம் படை வீடாகும்.

இங்குதான் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

மலையடிவாரத்தில் இருக்கும் திருஆவினன்குடி மற்றும் பழனி மலை முருகன் கோயில், மூன்றாம் படை வீடாகும்.

ஞானப்பழம் கிடைக்காததால், ஆண்டிக் கோலத்தில் பழனி மலை மீது முருகன் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

சுவாமி மலை முருகன் கோயில் நான்காம் படை வீடாகும்.

முருகன், தனது தந்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறியதால், இங்குள்ள முருகன் சுவாமிநாதன் எனப் பெயர் பெற்றார்.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக இருப்பது திருத்தணி

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர மற்றும் முத்துசாமி தீட்சிதரால் பாடம் பெற்ற தலம்.

முருகனின் ஆறாம் படை வீடு பழமுதிர்சோலையாகும். ஔவை பிராட்டியை, சிறுவனைப் போல வந்து சோதித்தது இங்குள்ள மரத்தின் கீழ் என்று புராணங்கள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.