பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
துர்க்கை அம்மன் தனி சன்னதியில் காட்சி தரும் இந்த கோயில் ஆண்டுதோறும் முத்துப்பந்தல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா கடந்த 13 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஞானவாவி குளத்தில் இன்று, திருஞான சம்பந்தருக்கு, சுவாமி - அம்மன் காட்சி அளித்து திருமுலைப்பால் வழங்கி முத்துபந்தலில் காட்சி அளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருஞானசம்பந்தர் கோயிலில் இருந்து புறப்பட்டு முத்து பந்தலில் எழுந்தருள நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 30 அடி நீளமும், 20 அடி உயரமும் உள்ள முத்து பல்லக்கினை தோளில் சுமந்து வீதி உலா சென்றனர்.