ஆனி மாத சனிப்பிரதோஷம்! என்ன ஸ்பெஷல்?

ஆனி மாதத்தில் வரும் பிரதோஷம் அதிலும் சனிப்பிரதோஷமாக அமைந்துள்ளது. இன்று சிவபெருமானை வழிபடக்கூடிய மிகச் சிறப்பு வாய்ந்த நாள்.

பிரதோஷத்தன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள நேரம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்ததாகும்.

அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று, நந்தி பகவானுக்கு அருகம்புல் மற்றும் வில்வ இலைகளைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

ஆனி மாத பிரதோஷ வழிபாட்டின் போது சிவபெருமானுக்கு தேனும் தினைமாவும் படைப்பது மிகுந்த பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை

மேலும், சிவபெருமானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், வில்வ இலை முதலியவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு.

சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம்.

ஆனி பிரதோஷத்தில் வழிபட்டு, பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். திருமணத் தடை நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிகளுக்கு...