கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர சனி கிரகம், இரண்டரை முதல் இரண்டே முக்கால் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

காரைக்காலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான், அபய முத்திரையுடன், கிழக்கு நோக்கிய பார்வையில், அனுகிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு சனி பகவான் இடம்பெயர்ந்தார்.

தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் நளன் குளத்தில் அதிகாலை முதல் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர்.

பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம், திருநள்ளாற்றில் பல்வேறு இடங்களில் கட்டணத்துக்கான டிக்கெட் வழங்கும் மையத்தை அமைத்துள்ளது.

கோயிலில் தங்க காக வாகனத்தில் உற்சவரான ஸ்ரீ சனீஸ்வர பகவான் வடக்குப் பிரகார மண்டபத்துக்கு வியாழக்கிழமை இரவு எழுந்தருளச் செய்யப்பட்டார். வரிசையில் செல்லும் பக்தர்கள் தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசித்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...