நாடு முழுவதும் ராம நவமி இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் கண்கொள்ளா காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
இந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
இந்த நிகழ்வின்போது கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம ராம என்ற கோஷத்துடன் அரிய நிகழ்வை தரிசித்தனர்.
இந்த காட்சியை ஊடகங்கள் வாயிலாகவும் ஏராளமான ராம பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.
இன்று ராமநவமி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.