குருப்பெயர்ச்சி பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேஷம்குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும்.அஸ்வினி: உங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள்.பரணி: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கார்த்திகை - 1: காரிய தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

ரிஷபம்பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். வாகனம், நிலம் ஆகியவற்றில் நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. கார்த்திகை - 2, 3, 4: மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சுமூகமான நிலை நீடிக்கும். ரோகினி: பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாள்களாக இழுபறியாக இருந்த வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மிருகசீரிஷம் - 1, 2: வீடு கட்டுவதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். பரிகாரம்: மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

மிதுனம்குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும்.மிருகசீரிஷம் - 2, 3: வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாகும். திருவாதிரை - வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். புனர்பூசம் - 1, 2, 3 - எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். பரிகாரம் - புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு ஏற்பட்ட தடை, இனி மாறும். புனர்பூசம் 4 - பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளை பற்றிய மனக்கவலை நீங்கும். பூசம் - வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்குப் பின் நடந்து முடியும். ஆயில்யம் - கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.பரிகாரம் - அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சிம்மம்சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். மகம் - உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும்.பூரம் - உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். உத்திரம் 1 - குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். மனதில் பக்தி உண்டாகும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.பரிகாரம் - ஞாயிற்றுக் கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும்.

கன்னிகுரு உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள்.உத்திரம் - 2, 3, 4 - கடன் பிரச்னை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். சொத்து வாங்கும் போதும் விற்கும் போதும் கவனம் தேவை. ஹஸ்தம் - வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். காரியங்களில் வெற்றி பெற திட்டமிடுதலும் ஆலோசனை செய்வது நல்லது. சித்திரை - 1, 2 - சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். பரிகாரம் - அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும்.

துலாம்உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பை இந்த பெயர்ச்சி காலம் தரும். சித்திரை - 3, 4 - குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மை தரும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். ஸ்வாதி - சொந்தம், நட்பு வகையில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சில நேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. கடன் பிரச்னைகள் குறையும். விசாகம் - 1, 2, 3 - உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். பரிகாரம் - குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். விசாகம் 4 - தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.அனுஷம் - குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை. கேட்டை - எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். பரிகாரம் - துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

தனுசுபுகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிலும் கௌரவமான நிலையை அடைவர்.மூலம் - உத்தியோகத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லதுபூராடம் - வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். உத்திராடம் 1 - சொத்து சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. பரிகாரம் - ராகு, கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களைப் போக்கி மனதில் நிம்மதியை தரும்.

மகரம்பணரவரவு குறையும் என்பதால், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும்.உத்திராடம் - 2, 3, 4 - சுபச்செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. திருவோணம் - குடும்பத்தில் மதிப்பை பெறுவீர்கள். ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். அவிட்டம் - 1, 2 - தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். பரிகாரம் - ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு.அவிட்டம் - 3, 4 - கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. சதயம் - உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. பூரட்டாதி - 1, 2, 3 - சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்திறமை அதிகரிக்கும். பரிகாரம் - விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

மீனம்மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புகளை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடமும் அளவுடன் பேசுங்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். பூரட்டாதி 4 - வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். உத்திரட்டாதி - வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். ரேவதி - பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் உண்டாகும். பரிகாரம் - முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..