108 திவ்ய தேசங்களில் 20-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது நிலமேகப் பெருமாள் திருக்கோயில்.
திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் மாமணி கோயில் என்று அழைக்கப்படும் மூன்று கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இத்திருத்தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது. மகிழ மரம் அனுசத்திற்கு உண்டானது.
விருச்சிக ராசிக்காரர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
நீலமேகப் பெருமாள் என்ற நாமத்துடன் பெருமாள் காட்சியளிப்பதால் இங்கு நீல வண்ண உடை சாத்தி பெருமாளை வணங்கினால் திருமணத்தடை, புத்திர தோஷம், பித்ரு தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் பெருமாள் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார்.