சர்வதேச பெண்கள் தினம்: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்!

DIN

உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நூற்றாண்டுக்கு மேலாக பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக கொண்டாடப்படும் இந்த நாள் எங்கு ஆரம்பித்தது என்பது விவாதத்துக்குட்பட்டது.

நியூயார்க்கில் 1909-ல் இந்த தேதியில் பொதுவுடைமை கருத்துடைய பெண்கள் மற்றும் ஜவுளி தொழிலாளர்கள் குறைவான வேலை நேரம், சம்பள உயர்வு, வாக்குரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுதான் தொடக்கம் என ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

ஜெர்மானிய தலைவர் கிளாரா ஜெட்கின், 1910-ல் கோபன்ஹேகன் மாநாட்டில் பெண்கள் தின கோரிக்கை வைத்ததுதான் இதன் ஆரம்பம் என இன்னொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

அதன் பிறகு இந்த நாளில் ஐரோப்பிய செயல்பாட்டாளர்கள் வாக்குரிமை, தலைமை தாங்கும் உரிமை, பணியிட உரிமைகள் ஆகியவற்றுக்காக பெருமளவில் பேரணிகள் நடத்த தொடங்கினர்.

1975-ல் ஐக்கிய நாடுகள் அமைப்பு மார்ச் 8-ம் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது.

உலகம் முழுவதும் வெவ்வேறு வகையில் இந்த நாளில் கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன. சீனாவில் அரை நாள் விடுமுறை எடுத்துகொள்கிறார்கள்.

ரஷியாவில் பெண்கள் தினம் அரசு விடுமுறை நாள். இத்தாலியில் ஒருவருக்கொருவர் மிமோசா மலர்களைப் பரிமாறி கொள்கிறார்கள்.

பெண்கள் வரலாற்று மாதத்தையொட்டி அமெரிக்காவில் பேரணி நடத்தப்படுகிறது.

2024-க்கான பெண்கள் தினக் கருத்துருவாக ‘பெண்களின் வளர்ச்சியில் முதலீடு செய்து முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள்’ என்பது முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தின வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்