உலக அரசியலில் இந்தியப் பெண்கள்!

DIN

அரசு/ நாட்டின் தலைவராக பெண்கள் இருப்பது வெறும் 31 நாடுகளில் மட்டுமே. அதுவும் நான்கில் ஒருவர் மட்டுமே அமைச்சராக உள்ளனர். இந்த நிலையில் உலக அரசியலில் ஆளும் பொறுப்பில் உள்ள இந்திய பெண்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். முதல் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முதல் பெண் அமெரிக்க ஜனாதிபதி என்கிற வரலாற்றை உருவாக்க முடியும்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ள நிக்கி ஹேலி, பஞ்சாபிய சீக்கிய பெற்றோர்களுக்கு பிறந்தவர். இருமுறை தெற்கு கரோலினா ஆளுநராக பதவி வகித்தவர்.

சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால், 7-வது வாஷிங்டன் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமெரிக்க சட்ட மன்றத்தில் இடம்பெற்றுள்ளவர். அவரது சகோதரி சுசீலா ஜெயபாலும் ஓரேகான் மாகாணத்தில் போட்டியிட்டார்.

தீபாவளியை அமெரிக்காவில் விடுமுறை நாளாக்கிய ஜெனிபர் ராஜ்குமார், நியூ யார்க் மாகாண சட்டபேரவை உறுப்பினர்.

கடந்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மேரிலாண்ட் மாகாணத்தின் ஆளுநர் அருணா மில்லர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முதல் அமெரிக்க ஆளுநராவார். ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர் இவர்.

ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி எம்பியாக தேர்வான ஜனேட்டா மஸ்கரேன்ஹாஸ், கோவாவைச் சேர்ந்தவர்.

நியூசிலாந்து பன்முக துறையின் அமைச்சராக தேர்வான முதல் இந்திய வம்சாவழியினர் பிரியங்கா ராதாகிருஷ்ணன், கேரளா இடதுசாரி தலைவர் கிருஷ்ணன் பிள்ளையின் வழித்தோன்றல். இவருக்கு 2021-க்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது.

கனடா அரசின் கருவூல வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அனிதா ஆனந்த் பஞ்சாபிய தாய்க்கும் தமிழ் தந்தைக்கும் பிறந்தவர். முன்னர் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

சிங்கப்பூர் அமைச்சராக 2018-ல் தேர்வான இந்திராணி ராஜா, தமிழ் தந்தைக்கும் சீன தாய்க்கும் பிறந்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்