பஞ்சாங்கம்

செவ்வாய்க்கிழமை

18

விகாரி வருடம், மாசி 6 -ம் தேதி

நல்ல நேரம்

காலை 7.30 - 8.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

3.00 - 4.30

எம கண்டம்

9.00 - 10.30

குளிகை

12.00 - 1.30

திதி

தசமி

நட்சத்திரம்

கேட்டை

சந்திராஷ்டமம்

கார்த்திகை

இன்றைய ராசிபலன்

மேஷம் - வெற்றி
ரிஷபம் - எதிர்ப்பு
மிதுனம் - அசதி
கடகம் - சிக்கல்
சிம்மம் - வரவு
கன்னி - சுகம்
துலாம் - தாமதம்
விருச்சிகம் - மகிழ்ச்சி
தனுசு - தடங்கல்
மகரம் - நட்பு
கும்பம் - பயம்
மீனம் - கவலை

யோகம்: சித்த, அமிர்த யோகம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

விசேஷம்: காளஹஸ்தி சிவபெருமான் ரிஷப சேவை. கோயம்புத்தூர் ஸ்ரீ கோணியம்மன் பூச்சாற்று விழா. 

கேள்வி - பதில்
 • என் மகன் பி.இ., படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். வங்கிப்பணி கிடைக்குமா? தாத்தாவின் வீட்டுமனை பாகப்பிரிவினையாகி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா? எப்போது திருமணம் நடைபெறும்?  - வாசகர், புதுக்கோட்டை
 • உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று சூரிய, குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று, அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவானால் (சனிபகவான் கும்ப மூலதிரிகோண ராசியில் அமர்ந்திருக்கிறார்) பார்க்கப்படுகிறார். லாபாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் சுய சாரத்தில் பலம் பெற்று அமர்ந்து லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அவர் படித்துள்ள துறையிலேயே வேலை கிடைக்கும். பூர்வீக இடம் கிடைத்து அந்த இடத்தில் வீடு கட்டும் யோகமும் உண்டாகும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் திருமணம் கைகூடும். பிரதி தினமும் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.
   

 • என் வயது 32. நான் எம்.ஏ., பி.எட்., டி.டி.இ.டி முடித்துள்ளேன். அரசு வேலை கிடைக்குமா? என் மாமியார் வழி சொத்தில் சிக்கல் உள்ளது. அதில் தீர்வு கிடைக்குமா? கணவர் கூலி வேலை செய்து வருகிறார். குடும்பம் முன்னேற்றம் பெற என்ன செய்யலாம்? சொந்த வீடு எப்போது அமையும்?  - வாசகி, திருக்கோவிலூர்
 • உங்களுக்கு மீன லக்னம், மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக சர்வீஸ் என்கிற உத்தியோக வீட்டையும் அதில் அமர்ந்திருக்கும் ஆட்சி பெற்றிருக்கும் ஆறாமதிபதியான சூரியபகவானையும் தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானையும் பார்வை செய்கிறார். இதனால் சிவராஜ யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்களும் உண்டாகிறது. ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும்; ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் பார்வை செய்கிறார். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்வது ஒருவகையில் தர்மகர்மாதிபதி யோகத்தை உண்டாக்குகிறது. பூர்வபுண்ணியாதிபதியான சந்திரபகவான் சுக ஸ்தானத்தில் பாக்கியாதிபதியின் சாரத்தில் (ஒரு திரிகோணாதிபதி ஒரு கேந்திர வீட்டில்) அமர்ந்திருப்பதால் உங்கள் இரண்டு குழந்தைகளும் வாழ்க்கையில் நல்ல நிலைமையை எட்டி விடுவார்கள். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு வேலை இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் கிடைத்துவிடும். உங்கள் கணவர் வழி பூர்வீகச் சொத்தும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கைவந்து சேர்ந்துவிடும். அதை விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதோடு அந்த காலகட்டத்தில் சொந்த வீடு பாக்கியமும் உண்டு. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • நான் தனியார் துறையில் 20 ஆண்டுகளாக வேலைப் பார்த்து வருகிறேன். வாடகை வீட்டில் வசிக்கிறேன். இடையில் நண்பருடன் சேர்ந்து தொழில் ஆரம்பித்தேன். அதிலும் நட்டம். வேலையில் போதுமான ஊதியம் இல்லை. தற்போது அரசாங்க வேலைக்காக தேர்வு எழுதியுள்ளேன். அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா? சொந்த வீடு அமையுமா? வேறு தொழில் ஏதும் தொடங்கலாமா?  - வாசகர், விருத்தாசலம்
 • உங்களுக்கு கடக லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். லக்னாதிபதி நான்காம் வீட்டில் திக்பலம் பெற்று இருக்கிறார். பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தர்மகர்மாதிபதிகளாகி அயன ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். குருபகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் (குருசந்திர யோகம்); ஏழாம் பார்வையாக ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தையும்; ஒன்பதாம் பார்வையாக எட்டாம் வீட்டையும்; அங்கு அமர்ந்திருக்கும் சூரியன், புதன், சுக்கிர பகவான்களையும் பார்வை செய்கிறார். குருமங்கள யோகம், சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அரசுக்கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய் மற்றும் குருபகவான்கள் வலுத்திருப்பதால் விரைவில் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு சொந்த வீடு அமையும். புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • என் நண்பரின் மகன் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்துள்ளார். தற்போது வீட்டில் குறைந்த வருமானத்தில் இருக்கிறார். எம்.எஸ்.சி., படித்துள்ள அவருக்கு தக்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்?  - வாசகர், ஸ்ரீரங்கம்
 • உங்கள் நண்பரின் மகனுக்கு மகர லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தனம் வாக்கு குடும்பாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சனிபகவானின் மூன்றாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் தர்மகர்மாதிபதிகளின் மீதும், ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின்மீதும், பத்தாம் பார்வை ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் படிகிறது. புத, சுக்கிர பகவான்களின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவானுடனும் ராகுபகவானுடனும் இணைந்திருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை அயன ஸ்தானத்தின் மீதும் ஏழாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் படிகிறது. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சூரியபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு அவருக்கு திருமணம் கைகூடும். மறுபடியும் வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும்.
   

 • எனக்கு 76 வயது முடிந்துள்ளது. வாழ்க்கையில் நான் சுகப்பட்ட காலம் மிகவும் சொற்பம். மிகக்குறைந்த வருமானத்தில் வாழ்க்கை. கஷ்ட ஜீவனம். 17 வயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்க ஆரம்பித்தேன். குழந்தைகளை மிகவும் சிரமத்துடன் படிக்க வைத்தோம். மகள் நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார். மகன் விருப்பத் திருமணம் செய்து 32 வயதில் மனைவியை இழந்து விட்டார். எனது மகனின் வாழ்க்கை எப்போது சீரடையும்? மறுமணம் நடைபெறுமா? எனக்கு நிம்மதி எப்போது கிடைக்கும்?  - வாசகர், மேற்கு மாம்பலம்
 •  உங்களுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். லக்னாதிபதியும் தர்மகர்மாதிபதியும் லக்னத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தன, பூர்வ புண்ணியாதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் உச்சம் பெற்ற சுகாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து இருக்கிறார். இதனால் புதஆதித்ய யோகம் உண்டாகிறது.புத்திரகாரகரான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக கர்ம ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்து இருக்கும் திக்பலம் பெற்றுள்ள செவ்வாய்பகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது. இதனால் உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் மறுமணம் கைகூடும். உங்கள் குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

 • என் மகனுக்கு 38 வயது ஆகிறது. திருமணம் தள்ளிப்போகின்றது. எப்போது திருமணம் கைகூடும்? குணமான பெண் அமைவாரா? நிரந்தர வேலை கிடைக்குமா? நல்ல வேலை, திருமணம் அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், சேலம்
 • உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்பராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் ஐந்தாம் வீட்டில் சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைக் கொடுக்கிறார். ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுவதால் சூரியபகவானுக்கும் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியும் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமைந்திருக்கிறார்கள். தற்சமயம் பாக்கியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு, ஜூலை மாதத்திற்குள்படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • இரட்டையர்களாகப் பிறந்த எனது மகள்களுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? செவ்வாய் தோஷம் உள்ளதா? எத்திசையில் வரன் அமையும்?  - வாசகர், காரைக்குடி
 • உங்கள் இரண்டு மகள்களுக்கும் (இரட்டையர்கள்) விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் வர்கோத்தமத்தில் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் தோஷம் இல்லை. குருபகவான் லக்னத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் களத்திர நட்பு ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களையும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது. அவர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன்கள் அமைந்து திருமணம் கைகூடும். இருவருக்கும் அரசு வேலை கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் வழிபட்டு வரவும். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • எனது கணவர் திருமணத்திற்குமுன்பு வெளிநாட்டில் கப்பல் துறைக்கு படித்து வேலையும் செய்து, திரும்பி வந்து விட்டார். வெளிநாட்டு வேலைக்கு தொடர்ந்து, ஓர் ஆண்டாக முயற்சி செய்தும் தோல்வி தான் கிடைத்தது. ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?  - வாசகி, மதுரை
 • உங்கள் கணவருக்கு கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். பூர்வபுண்ணியாதிபதி லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று குடும்பாதிபதியுடன் இணைந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்திலுள்ள குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். களத்திர நட்பு ஸ்தானாதிபதியும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் யோகமும் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும்.

 • நான் பி.எஸ்.சி., படித்துள்ளேன். எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசு வேலை எப்போது கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?  - வாசகி, பெரம்பூர்
 • உங்களுக்கு சிம்ம லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள குருபகவானால் பார்க்கப்படுகிறார். சுக, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சிப் பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் குருபகவானும் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் சிறப்பு. தற்சமயம் புதபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உங்களுக்கும் அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • எனது மகனுக்கு ஆரோக்கியம் எப்படி உள்ளது? குழந்தைபாக்கியம் எப்போது கிடைக்கும்? நல்ல உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?  - வாசகர், பட்டுக்கோட்டை
 • உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். தனம் வாக்கு குடும்பம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று களத்திர ஸ்தானத்தையும் அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதியையும் பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் அங்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிரபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம், ராகு மகாதசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. உங்கள் மருமகளுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி, லாபாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் அவருக்கு சுக்கிரபகவானின் தசையும் நடக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அவர்களுக்கு குழந்தைபாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

 • குரு தசை தொடங்கியவுடன் கட்டுமான கம்பெனி தொடங்கினேன். சனி தசை புதன் புக்தி வரை, சிறப்பாகச் சென்றது. பிறகு சரிவு ஏற்பட்டு இன்றுவரை அனைத்து முயற்சிகளும் தோல்வியே. துலா லக்னத்திற்கு சனி தசை யோக தசையாகச் செல்லும் என்றார்கள். யோகத்திற்குப் பதிலாக கஷ்டங்கள் தான் மிஞ்சியது. கம்பெனி பெரிய நிலையிலிருந்து கீழே விழுந்து விட்டது. மறுபடியும் பழைய நிலைக்கு வருமா? என் ஜாதகத்தில் என்ன குறை? பலரும் யோக ஜாதகம் என்றே கூறினார்கள். தற்சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும்? 
 • உங்களுக்கு துலாம் லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதியான சந்திரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதியானவர் நான்கு கேந்திரங்களில் கடைசி கேந்திரமான மிகவும் வலுவான உச்ச கேந்திரத்திற்கு அதிபதியாவதால் ஒரு மனிதனின் ஜீவனத்திற்கு காரணமாகிறார். பொதுவாக, தொழில் ஸ்தானம் சர ராசியாக இருந்தால் பல நாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் யோகம் வாய்க்கும் என்று கூற வேண்டும். மற்ற கிரகங்களின் வலுகூடினால் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்துக்கொண்டே இருப்பார். இதற்கு மற்ற கேந்திர திரிகோணாதிபதிகளின் உன்னத பலம் அவசியமாகும்.
   உங்களுக்கு கடக ராசி சர ராசி மற்றும் நீர் ராசியாகவும் ஆகிறது. சந்திரபகவான் நீர் கிரகமாகி ஸ்திர ராசியில் உச்சம் பெறுவதால் உங்கள் தொழிலில் வெளிநாடு சம்பந்தம் இறுதிவரை தொடரும் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சந்திரபகவானின் (ரோகிணி நட்சத்திரம்) சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதியும் ஆட்சி பெற்று வர்கோத்தமும் பெற்று உச்சகிரகத்துடன் இணைந்திருப்பது மிகவும் அரிதான அமைப்பாகும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். துலாம் லக்னத்திற்கு சனிபகவான் ஒரு கேந்திர வீட்டிற்கும் ஒரு திரிகோண வீட்டிற்கும் அதிபதியாகிறார். முதல் வீடு கேந்திரமாகவும் அடுத்த வீடு திரிகோண வீடாகவும் ஒரு சுபாவ அசுபக்கிரகத்திற்கு அமைவது துலாம் லக்னத்திற்குத்தான் அமையும் என்பதை பலமுறை எழுதியிருக்கிறோம். ஏனெனில் சுபாவ அசுபக்கிரகங்களுக்கு கேந்திர வீடுகளுக்கு அதிகாரம் ஏற்பட்டால் மிகவும் பலம் வாய்ந்தது என்று கூறவேண்டும்.
   உங்களுக்கு சனிபகவான் நான்காம் வீட்டிற்கு அதிபதியாகி பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைக் கொடுக்கிறார். பிறகு, அவர் முதல் திரிகோண வீட்டிற்கும் அதிபதியாவதால் யோககாரகர் என்கிற நிலைமைக்கு உயர்கிறார். மேலும் அவர் ராஜயோக காரகர் என்கிற பெயரையும் பெறுகிறார். பன்னிரண்டு லக்னங்களில் துலா லக்னத்திற்கு சனிபகவான் இத்தகைய சிறப்பான பெயரைப் பெறுகிறார். அதேநேரம் சனிபகவான் ராகுபகவானின் சாரத்தில் இருப்பது சிறிது குறை என்றே பார்க்கவேண்டும். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும்; அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சுக்கிரபகவானின் (பரணி நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். லாபாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் (பரணி நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் நீச்சமடைகிறார். ராகுபகவான் மூன்றாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். கேதுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
   உங்களுக்கு ஜாதகம் மிகவும் வலுவாக அமைந்திருக்கிறது. மூன்று கிரகங்கள் உச்சம். லக்னாதிபதி ஆட்சி. குருபகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து லக்னத்தையும்; அங்கு உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவானையும்; தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், ராகுபகவான்களையும் பார்வை செய்கிறார். சனிபகவானை குருபகவான் பார்த்த ஜாதகங்கள் சோடை போவதில்லை. யோகங்களில் முக்கியமான யோகமாக சுனபா யோகம் கருதப்படுகிறது. இந்த யோகம் முழுமையாக வேலை செய்ய சந்திரபகவான் அதி உன்னதமான பலம் பெற்றிருக்க வேண்டும். சுனபா யோகத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று பிறந்தது முதல் இறுதிவரை சிறப்பாக வாழ்தல். இரண்டாவது வகை வாழ்க்கையில் முற்பகுதியில் மிகவும் கஷ்டப்பட்டாலும் (பிதுர் சொத்துகள் எதுவும் இன்றி, அப்படி இருந்தாலும் அவைகளை அனுபவிக்க முடியாத சூழல்) சுயமாக சம்பாதித்து ஓர் அரசனுக்கும் சமமான அந்தஸ்தைப் பெறுவது. நீங்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவர் என்று அறிகிறோம்.
   உங்களுக்கு உச்ச சந்திரபகவானுக்கு இரண்டாம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பது சுனபா யோகமாகும். ஒருவருக்குப் பெரிய யோகம் இல்லை என்றாலும் இந்த யோகம் ஜாதகரை மளமளவென்று உயர்த்திவிடும். எக்காலத்திலும் பணம் கையில் புரண்டு கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களை பங்குதாரர்களாக அமைத்துக் கொண்டு கூட்டு வியாபாரம் செய்தால், செய்யும் வியாபாரத்தில் கண்ணியமும் வாடிக்கையாளர்களின் ஆதரவும் கணிசமான லாபமும் கிடைக்கும். நல்ல புத்தியுடன் மற்றவர்களுக்குத் தீர்க்காலோசனைகளையும் வழங்கிவிடுவார்கள். இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்கள். அதோடு இவர்கள் ஏற்கும் பயணங்களெல்லாம் மகிழ்ச்சிகரமாகவும் புனித யாத்திரையாகவும் அமையும். அயல்நாடுகளுக்கும் சென்று வருவார்கள். இவர்கள் புகழ் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவி நிற்கும். அந்த அளவுக்கு இவர்களுடைய செயல்திறன் சிறப்புடையதாக பரவி நிற்கும்.
   அனைத்து யோகங்களுக்குள்ளும் ஒரு சோகம் / பிழை ஒளிந்திருக்கும். இவர்களுக்கு எதிரிகளும் மறைந்திருப்பார்கள். இதற்கு மூலக்காரணம் துரிதமாகச் சலனம் செய்யக்கூடிய சந்திரபகவானுக்கு எதிரில் அதாவது முன்பாதையில் சந்திரபகவானுக்கு வேண்டப்படாத குரு, சுக்கிர, புத பகவான்கள் இருப்பதால்தான் இவர்களின் முன்னேற்றத்தைக்கண்டு பொறாமைப்படக்கூடிய மறைமுக எதிரிகளும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருப்பார்கள். சந்திர, சுக்கிரபகவானால் ஏற்படக்கூடிய சுனபா யோகமானது சுக வாழ்க்கையில் நாட்டத்தை ஏற்படுத்தி குறிப்பாக, பெண்களால் விரோதத்தை ஏற்படுத்தும். சந்திரபகவானுக்கு அடுத்து குருபகவான் இருப்பது சகட யோகத்தை உண்டாக்குகிறது. இது எப்படிப்பட்ட செல்வளத்தையும் உடைத்தெறியும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் அணுகுண்டைப் போன்ற அமைப்புடையதாகும். எல்லாம் கூடிவரும் நேரத்தில் காரியம் விக்னமாகி கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விடும்.
   மேற்கண்ட வகையில் சுனபா யோகம் பணத்தைக் கொடுத்து மனதிற்குப் போராட்டத்தையும் கொடுத்துவிடும் என்பதையும் சேர்த்துப் பலன் காணவேண்டும். இது பலரின் ஜாதகத்தில் அமைந்து அனுபவத்தில் ஒத்துவருவதைக் காண்கிறோம். அதாவது, எந்த தசையில் யோகபாக்கியங்கள் உண்டானதோ அதற்கடுத்த தசையில் சரிவும் அதற்குப்பிறகு தொடங்கும் தசையில் மறுபடியும் ஏற்றங்களையும் காண்பார்கள். அதோடு சிறிய அளவில் உள்ள பித்ரு தோஷமும் உங்களின் சனி மகா தசையில் வேலை செய்தது என்றும் கூறலாம்.
   உங்களுக்கு சனி மகாதசை அடுத்த ஆண்டு, மே மாதம் முடிவடைகிறது. தற்சமயம் அஷ்டம சனியும் முடிவடைந்து விட்டது. இந்த ஆண்டே இன்னும் சில மாதத்திற்குள் நீங்கள் எதிர்பார்த்த பண வாய்ப்புகள் கிடைக்கும். தொடரும் புதபகவானின் தசை முழுவதும் கோலோச்சும் காலமாகவே அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
   
   

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை