கடகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

கடகம் (CANCER)

இது ஒரு பெண் ராசி. அத்துடன் நீர் ராசியும்கூட. இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது. இந்த ராசியின் உருவம் நண்டு. இதை D என்ற குறியீட்டால் குறிப்பார்கள். அதாவது, நண்டின் கால்கள்தான் இந்த உருவம். உடல் உறுப்புகளில் மார்பையும், வயிற்றுப் பகுதியையும் குறிப்பது இந்த ராசி. இந்த ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தமான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இது ஒரு ஊமை ராசியும்கூட. பிறவியில் பேச முடியாதவர்களுக்கு வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டோடு இந்த ராசி சம்மந்தப்பட்டிருக்கும். இந்த ராசியில் குருவானவர் உச்சம் பெறுகிறார். செவ்வாய் நீச்சம் பெறுகிறார். இதன் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள்.

டிசம்பர் 2

இன்று குடும்பத்தில்  இருப்பவர்களுடன் கோபமாக  பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
 

டிசம்பர் 1 - 7

 

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பெற்றோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். அலட்சியம் செய்த நண்பர்கள் மனம் மாறி உங்களை நேசிப்பார்கள்.  தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் கவனம் செலுத்துவார்கள். விவசாயிகளின் மகசூல் உயரும்.

அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு மனதில் இருந்த பதற்றம் நீங்கும். பெண்கள் குடும்பத்துடன் 
ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

டிசம்பர் மாத பலன்கள்

 

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

தைரிய வீரிய  ஸ்தானத்தில் கேது -  சுக  ஸ்தானத்தில் சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் புதன் -  களத்திர  ஸ்தானத்தில் சனி -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  - தொழில்  ஸ்தானத்தில் குரு (வ) என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

02-12-2023 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2023 அன்று சூர்ய பகவான்பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-12-2023 அன்று சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-12-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும்.

பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.

அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

புனர்பூசம்:

இந்த மாதம் குடும்பத்தில்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.

பூசம்:

இந்த மாதம் எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம்  எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும். 

ஆயில்யம்:

இந்த மாதம் உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.

பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023

(புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்களுக்கு கடக ராசி அன்பர்களே இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள், நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது. உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள். குறுக்கு வழியில் பிரவேசிக்காதீர்கள். குடும்ப நலம் சீராக இருக்கும்.  மனக்கிலேசம், உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஏற்படவும் ஓர் அமைப்பு முனைந்து நிற்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். எனினும் அன்றாட பணிகள் சரிவர நடக்கும். அளவான வருமானம் வர தடை இருக்காது. முன்விரோதம் காரணமாக ஒரு சிக்கல் ஏற்படலாம். அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

வியாபாரிகளுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம். விவசாயிகளுக்கு வீண் பிரச்சினை ஒன்று உருவாகலாம். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிக்க பொறுப்புடன் பணியாற்றி நற்பெயரைக் காத்துக் கொள்வது அவசியம். 

அரசியல்வாதிகள் அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வரத் தூண்டப்படுவார்கள். நிதானம் தேவை. எந்த பிரச்சனையையும் குறுக்கு வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நேர் வழியே நலம் பயக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தமட்டில் வரவும் உண்டு; செலவும் உண்டு. செலவில் சில விரயமானதாகவும் இருக்கக் கூடும்.  

கலைத்துறையினருக்கு நன்மை தீமைகள் கலந்தவாறு நடக்க இடமுண்டு. பொதுவாக பொருளாதார சங்கடம் உருவாகாது. ஆனால், அதிகப்படியான செலவு உண்டாகலாம். டெக்னீஷியன்களுக்கு கௌரவம் கிடைப்பதுடன் பணவரவு உண்டாகவும் வாய்ப்புண்டு. 

பெண்களுக்கு குடும்ப நலம் அளவோடு இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். சிறு தொல்லைகள் இருந்தாலும் மன தைரியத்தால் அவை அனைத்தையும் வென்றுவிடுவீர்கள்.

மாணவர்கள் பொறியியல்துறை, மருத்துவத் துறையிலுள்ளோருக்குப் புகழ் பெற சந்தர்ப்பமுண்டு. உங்கள் வாழ்வில் உன்னத நிலை அடைவதற்குத் தேவையான அடிப்படை இந்த காலகட்டத்தில் அமையும்.

புனர்பூசம் 4ம் பாதம்: 

இந்த ஆண்டு இயந்திரப் பணி சம்பந்தப்பட்ட தொழில், வியாபாரம் ஓரளவுக்கு உற்சாகம் தரும்படி அமையும். வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரத் தடை உருவாகாது. விவசாயிகளுக்கு பிரச்சனைகள் அதிகமில்லை. பணிகள் சரிவர நடக்கும். கலைத்துறை பாதிக்கப்படாது. எழுத்தாளர்களுக்கு பிரச்சினை இராது. இந்த நேரத்தில் தெய்வ வழிபாடு புரிந்து வருவது நல்லது.  

பூசம்:

இந்த ஆண்டு கலைத்துறை சிறப்படையும். மக்கள் நலம் நல்லவிதமாக இருக்கும். திருமண முயற்சிகள் கூடிவரும்.  வியாபாரிகள் கவனக் குறைவால் எந்தத் தவறையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விவசாயிகளுக்கு தேவையான பண வரவு இருக்கும். கலைத்துறை சிறப்படையும். தெய்வப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மன அமைதி அடையும். 

ஆயில்யம்:

இந்த ஆண்டு ஏற்படும் தொல்லைகளில் இருந்து நன்மைகள் உண்டாகும். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பாதகமில்லை. தொழிலாளர்கள் எச்சரிக்கையாகப் பணியாற்றுவது அவசியம். மனக்கவலை இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சோதனை உண்டாகலாம். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.  அரசு அலுவலர்களுக்கு பணிகளில் போதிய திருப்தி கிடைக்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.