தனுசு

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

தனுசு (SAGITTARIUS)

இது ஒரு நெருப்பு ராசி. உபய ராசி மற்றும் ஆண் ராசி. இதன் அதிபதி குரு. குருவானவர் தெய்வ அம்சம் உள்ளவராகக் கருதப்படுகிறார். “குரு பார்க்கக் கோடி புண்ணியம்” என்பார்கள். குரு எங்கிருந்தாலும், அல்லது எங்கு பார்த்தாலும் நன்மை விளையும் என்று சொல்வார்கள். இந்த ராசி மிகுந்த முன்னேற்றத்தை தருகின்ற ராசி. மனித சுதந்திரத்தை எதிர்பார்க்கின்ற ராசி. நல்ல சிந்தனைகளைக் கொடுக்கின்ற ராசி. பாதி மனிதன் வில், அம்புடன் பாதி குதிரை மேல் இருப்பது போன்ற உருவத்தைக் கொண்டுள்ள ராசி. இதனுடைய சின்னம் அம்பு. இதன் குறியீடு I. இடுப்பு, தொடைகள் மற்றும் கணையத்தைக் குறிப்பது இந்த ராசி. இது ஒரு இரட்டை ராசி. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இங்கிருந்தால், நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சனி, சுக்கிரன், புதன் ஆகியவை இங்கிருந்தால், எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

டிசம்பர் 2

இன்று எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை  யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

டிசம்பர் 1 - 7

 

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சவாலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் உயரும்.

உத்தியோகஸ்தர்களின் திறமைக்கான மதிப்பு தாமதமாகவே கிடைக்கும். வியாபாரிகள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முயற்சி எடுப்பீர்கள்.  

அரசியல்வாதிகள் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றுவீர்கள்.  கலைத் துறையினர் துரிதமாகச் செயல்படுவீர்கள்.

பெண்கள் கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - டிச. 1, 2, 3.

டிசம்பர் மாத பலன்கள்

 

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில்  புதன் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சனி -  சுக  ஸ்தானத்தில் ராஹூ  - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) -  தொழில்  ஸ்தானத்தில் கேது -  லாப  ஸ்தானத்தில் சுக்ரன் -  அயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

02-12-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2023 அன்று சூர்ய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

20-12-2023 அன்று சனி பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-12-2023 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-2023 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.

தொழில் வியாபாரத்தில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.

அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும்.

மூலம்:

இந்த மாதம் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.

பூராடம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

உத்திராடம்:

இந்த மாதம் உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023

(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)

உங்களுக்கு இந்த ஆண்டில் பொருளாதார நிலையில் எந்தச் சிக்கலும் வராது. அன்றாடப் பணிகள் நிறைவேறும். ஆனால், அதற்காக அதிகப்படியாக உழைக்க வேண்டியிருக்கும். பெரியோர் நல்லாசியைப் பெற்று வாருங்கள். தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். உங்களுடைய வாழ்வில் உன்னத நிலை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். பணம் சேரும்.

பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வர லாம். அதனால் பயன் உண்டாகவும் வாய்ப்புண்டு. குடும்ப சுபிட் சம் சீராக இருக்கும். செல்வ நிலை, குடும்ப சுபிட்சம், தாம்பத்திய மகிழ்ச்சி எல்லாம் சீராக இருக் கும். கணவன் - மனைவியரிடையே கருத்து வேற்றுமை எழ இடம் தராதீர்கள். பிள்ளைகளை சற்று கவனமுடன் கண்காணிப்பது அவசியம்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்துக் கண்டிக்க நேரலாம். நண்பர்களில் நல்லவர்களை இனம் கண்டு பழகினால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள் ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் கடமையாற்ற வேண்டியிருக்கும்.

வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைபடாது. விவசாயிகளுக்குப் பிரச்சினை ஏதும் உருவாகாது. உபத்திரவம் அவ்வளவாக இருக்காது. இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் தொல்லை இல்லை. ஆதாயம் ஏற்பட இடமுண்டு. தொழில்கள் மேன்மையடையும். முதலாளி - தொழிலாளி உறவு பலப்படும்.

அரசியல்வாதிகள் அவசரப்படாமல் காரியமாற்றி நற்பெயரைக் காத்துக்கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பல விதமான நற்பலன்கள் ஏற்படக் கூடிய நிலை உண்டென்றாலும், அந்த நன்மைகளைப் பெறுவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கும்.

கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். உழைப்பாளிகளுக்குச் சோதனை இருக்காது. என்றாலும் கடுமையாக உழைத்து உரிய வருவாயைப் பெற வேண்டியிருக்கும். ஓரிரு சங்கடங்கள் ஏற்படுமானாலும், சாமர்த்தியமாக அதனைச் சமாளிக்கக் கூடிய வழியும் புலப்படும்.

பெண்களுக்கு கௌரவம் ஓங்கும். புகழ் கிடைக்கும். பணக் கஷ்டம் உண்டாகாது. முயற்சிகள் தீவிரம் அடையும். சுறுசுறுப்போடு இயங்கக் கூடிய உங்களை, சில தீய நண்பர்கள் திசை திருப்பி விட நேரலாம். நல்லவர்களை இனம் கண்டு இயங்குங்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுங்கள்,

மூலம்:

இந்த ஆண்டு தொழிலில் தொய்வு உண்டாகாமல் காக்கும். வியாபாரிகளுக்குப் லாப கரமாக அமையும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் வரும். மகசூல் திருப்தி தரும். மருத்துவர்கள் புகழ் பெறுவர். முதலாளி - தொழிலாளி உறவில் சிக்கல் உண்டாகாது என்றாலும் சலசலப்பு ஏற்பட இடம் தரவேணடாம். குடும்ப விஷயங்கள் எல்லாம் சீராக அமையும். நற்பலன்கள் விளைவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கவே செய்யும். குறிப்பாக யாரிடமும் தகராறு செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பூராடம்:

இந்த ஆண்டு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருப்பதால் கண் வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகளுக்கு உள்ளாக நேரலாம். எனவே நேரம் பார்த்து உணவு உட்கொள்வதும், ஓய்வு எடுப்பதும் அவசியம். கலை, கல்வித்துறைப்பணிகள் மேலோங்கும். அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது. பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்ப சுபிட்சம் நல்லவிதமாகவே இருக்கும். அளந்து பேசுவது மிகவும் அவசியம். அவசரப்படாமல் இருப்பதும் அவசியம்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த ஆண்டு யாரிடமும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உண்டு. அதனால் நற்பலனும் உண்டாகும். உடல் நலம் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் பிறகு பூரண குணம் பெறும். எது எப்படியிருந்தாலும் அன்றாட வாழ்வில் சுபிட்சம் பாதிக்கப்படாது. கலை, கல்வி சம்பந்தப்பட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்குப் புகழ் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு ஏற்றம் உண்டு. லாபமும் இருக்கவே செய்யும். குடும்ப நலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக இருக்கும்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.