கன்னி

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

கன்னி (VIRGO)

இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும்கூட. இதன் அதிபதி புதன். புதனுக்கு இது உச்ச வீடாகவும் மற்றும் மூலத் திரிகோண வீடாகவும் ஆகிறது. இந்த ராசிக்கு ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசிக்கு உரிய சின்னம் F. புதனுக்கு சுக்கிரன் நண்பனாக இருந்தாலும், இந்த ராசியில்தான் சுக்கிரன் நீச்சமாகிறார். ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள். சனி இருப்பின், அது நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தையும், உள் உறுப்புகளில் குடலையும் குறிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள், பணம் சேமிக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் சேமிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

டிசம்பர் 2

இன்று எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிக ளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

டிசம்பர் 1 - 7

 

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.  முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள்.  உடல் உபாதைகள் மறையும். 

உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் ரகசியங்களைக் கசியாமல் பார்த்துக்கொள்வீர்கள். விவசாயிகள் பயிர்களை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணக்கமாக இருப்பீர்கள். கலைத் துறையினர் வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.

பெண்களுக்கு பொருளாதார நிலை உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும்.  மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

டிசம்பர் மாத பலன்கள்

 

 (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில்  கேது -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சுக்ரன் -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில் புதன் -  பஞ்சம ஸ்தானத்தில் சனி -  களத்திர  ஸ்தானத்தில் ராஹூ  - அஷ்டம  ஸ்தானத்தில் குரு (வ) என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

02-12-2023 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2023 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-12-2023 அன்று சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-12-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-2023 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.

குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.

பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு  உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

உத்திரம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும்  செலவு உண்டாகும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள்.

சித்திரை:

இந்த மாதம் சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்)

உங்களுக்கு இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். மனச்சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு. எனினும் சான்றோரை சந்தித்து வாருங்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு கெட இடமில்லை. துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்தரவைப் பெற பொறுமை காப்பது அவசியம். பொருளாதாரச் சங்கடம் உருவாகாது. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது.

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வருவதற்கான அமைப்பு உண்டு. நல்லோர் நேசமும், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி உண்டு. நில புலன்களில் எந்த விதமான வில்லங்கமும் உருவாக இடமில்லை. மெத்தப் படித்த மேலோர் சமூகத்தில் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதோடு, கணிசமான பொருளும் பெற்றும் கலைத்துறையில் மகிழ்ச்சி உண்டு.  அவர்களின் அன்றாடப் பணி தொய்வின்றி நடக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்களுக்கு உரிய வாய்ப்பு கிட்டும். கொடுக்கல் - வாங் கலில் நிதானம் இருக்கட்டும்.

அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் சமத்காரமாக நடந்து கொண்டு நற்பெயர் பெற வாய்ப்புண்டு. பொதுவாக கெடுதல்கள் ஏற்படுமானாலும், அந்தக் கெடுதல்கள் அவ்வளவாக பாதிக்காது. உழைப்பு வீண் போனது போலத் தோன்றலாம். ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை பெறவும் வாய்ப்புண்டு.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.  குடும்ப சுபிட்சம், தாம்பத்திய உறவு சீராக இருக்கும்.  சுப காரியங்கள் நடக்க இடமுண்டு. குறிப்பாக திருமணம் நடக்கும். மக்கட்பேறு உண்டாகவும் இடமுண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் ஏற்றம் பெறுவர். உடல் நலம் நல்லவிதமாக இருக்கும். மனதில் சலனம் ஏற்படலாம். தேவையில்லாத எண்ணங்கள் தோன்றலாம். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள்.  

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த ஆண்டு அலுவலர்கள் விரும்பத்தகாத உத்தரவுகள் பெற இடமுண்டு. குறிப்பாக  இடமாற்றம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்பட்டால் அவப்பெயரையே சம்பாதிக்க நேரும். அரசு விரோதத்தைச் சம்பாதிக்காதிருப்பதில் கவனமாய் இருங்கள். தீமைகளைத் தோற்றுவிப்பதில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் முனைந்து நிற்பார்கள். கவனம் தேவை. தெளிவான ஆலோசனையும், முயற்சியும் உங்களை அனைத்து கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றும்.

ஹஸ்தம்:

இந்த ஆண்டு வியாபாரிகள் லாபம் காண்பர். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண் டாகலாம். நன்மைகள் சற்றுத் தூக்கலாக நடக்கும். அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை உருவாக இட மில்லை. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. வேதம் அறிந்த விற்பனர்கள் போற்றப்படுவார்கள். எனினும் உஷார் தேவை. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாடப் பணிகள் தட்டுத் தடுமாறி நடக்கும். 

சித்திரை 1, 2 பாதங்கள்:

இந்த ஆண்டு வியாபாரிகள் மிகுந்த அலைச்சல் பட்டே சிறிதளவு லாபம் காண்பர். தொழில் மாற்றம் அல்லது தொழிலில் சலனம் ஏற்படலாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் பாதிப்பு உண்டாகாது. நன்மைகள் உண்டாக குரு அருள்வார். மாணவர் - ஆசிரியர் உறவு நல்லிணக்கம் பெறும். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைத் துறை சுறுசுறுப்படையும். குடும்பத்தில் சுமுகம் நிலவும். சுபகாரியம் ஒன்று நடக்கலாம். நன்மைகளும், தீமைகளும் கலந்தவாறு நடக்கவே செய்யும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி  வரவும்.