எனக்கு இரட்டை குழந்தைகள். இவர்களில் மூத்த மகன் சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாக வேலை செய்கிறார். இளைய மகன் எம்.பி.ஏ., படித்துள்ளார். ஆனால் இவருக்கு இன்னும் எந்த வேலையும் சரியாக அமையவில்லை. நிலையான வேலை அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? - வாசகர், கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி. தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி. தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானின் பார்வையை பெற்று அமர்ந்துள்ளார்.தற்சமயம் குருமகா தசையில் பிற்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு நிரந்தர வேலை, புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com