என் மகளுக்கு மூன்று ஆண்டுகளாக திருமணம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? அரசு வேலை கிடைக்குமா? மாப்பிள்ளை எத்திசையில் அமைவார்? சூரியன், சுக்கிரன் நீச்சத்தில் உள்ளதால் திருமணம், வேலைவாய்ப்பில் தடை ஏற்படுகிறதா? - வாசகர், மதுரை

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி ராசியில் நீச்சம் பெற்றாலும் நவாம்சத்தில் ஆட்சி பெறுவதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், கும்ப ராசி. களத்திர ஸ்தானாதிபதி ராசியில் நீச்சம் பெற்றாலும் நவாம்சத்தில் ஆட்சி பெறுவதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. தற்சமயம் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சுக, பஞ்சமாதிபதியின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திருமணம் கைகூடும். தெற்கு திசையிலிருந்து வரன் அமைவார். அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உத்தியோகம் அமையும். மற்றபடி ஒரு கிரகத்துக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் ஏற்பட்டுவிட்டால் மற்ற நீச்ச கிரகங்களுக்கும் நீச்சபங்க ராஜயோகம் கிடைத்துவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com