பி. இ., படித்துள்ள என் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்கிறேன். தற்போது என்ன தசாபுக்தி நடக்கிறது? செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் இருக்கிறதா? - வாசகர், சென்னை

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து உச்சம் பெற்ற லாபாதிபதியுடன்

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து உச்சம் பெற்ற லாபாதிபதியுடன் இணைந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் தோஷம் என்று பெரிதாகக் கூறமுடியாது. சுகாதிபதி ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் இருப்பதும் சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி ஜாதகம் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com