Enable Javscript for better performance
எனது சகோதரருக்கு எப்போது திருமணம் கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், சென்னை- Dinamani

சுடச்சுட

    

    எனது சகோதரருக்கு எப்போது திருமணம் கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர், சென்னை

    By DIN  |   Published on : 09th February 2018 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் சகோதரருக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசி. அவருக்கு சுக ஸ்தானத்தில் சுகாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்து களத்திர ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். சுகாதிபதி கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக இருந்தாலும் அசுபக் கிரகங்களுடன் இணைந்திருப்பதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai