Enable Javscript for better performance
என் பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், கரந்தை- Dinamani

சுடச்சுட

    

    என் பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்?  - வாசகர், கரந்தை

    By DIN  |   Published on : 09th February 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் பேத்திக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி சூரியபகவான் குடும்பாதிபதியுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்து லக்னத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப் படுகிறார். இதனால் சிவராஜ யோகம், புத ஆதித்ய யோகம், கஜகேசரி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. களத்திர ஸ்தானாதிபதி 6 ஆம் வீட்டில் மறைவு பெற்று அசுபக் கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை. அதே
     நேரம் அந்த அசுபக்கிரகங்கள் தர்மகர்மாதிபதிகளாக ஆவதாலும் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதாலும் மணவாழ்க்கையில் பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது என்று கூறலாம். தற்சமயம் கேதுபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai