Enable Javscript for better performance
எனக்கு எப்போது திருமணம் கைகூடும்? -கந்தகிருஷ்ணன், ராஜபாளையம்- Dinamani

சுடச்சுட

    

    எனக்கு எப்போது திருமணம் கைகூடும்?  -கந்தகிருஷ்ணன், ராஜபாளையம்

    By DIN  |   Published on : 18th May 2018 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி. லக்னாதிபதி நீச்சம் பெற்றிருந்தாலும் அந்த வீட்டுக்கதிபதி உச்சம் பெற்றிருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜ யோகத்தைப் பெறுகிறார். தனம் வாக்கு குடும்பாதிபதி ஆறாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியால் பார்க்கப் படுகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சந்திரபகவான் அமர்ந்து இருப்பதும் சிறப்பு. உங்களுக்கு புத ஆதித்ய யோகம். நீச்சபங்க ராஜயோகம், சிவராஜ யோகம், கஜகேசரி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. உங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai