Enable Javscript for better performance
என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், ஆத்தூர்- Dinamani

சுடச்சுட

    

    என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?  - வாசகர், ஆத்தூர்

    By DIN  |   Published on : 18th May 2018 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு கடக லக்னம், கடகராசி. தைரிய ஸ்தானாதிபதி,சுகாதிபதி, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிகள் கேதுபகவானுடன் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள். இதனால் குடும்ப ஸ்தானம் வலுவாக உள்ளது என்று கூற வேண்டும். பாக்கியாதிபதி சுக ஸ்தானத்தையும் ஆறாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் அஷ்டம ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் ராகுபகவானின் புக்தி அடுத்த ஆண்டு இறுதிவரை நடக்கிறது. இந்த காலகட்டத்திற்குள் படித்த சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன் கிழமைகளில் பைரவரை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai