உங்களுக்கு மகர லக்னம், மகர ராசி. குடும்பாதிபதியும் தசாதிபதியும் அஷ்டம ஸ்தானத்தில் அசுபக்கிரகத்துடன் இணைந்திருப்பது குறை. தற்சமயம் குருபகவானின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடக்கத் தொடங்கி உள்ளது. இது திருமணத்திற்கு ஏற்ற காலகட்டமாக அமைகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.