உங்களுக்கு கன்னி லக்னம், துலா ராசி. லக்னாதிபதி லக்னத்திலேயே உச்சம் பெற்றிருப்பதும் தன, பாக்கியாதிபதி தன ஸ்தானத்திலேயே மூலதிரிகோணம் பெற்றிருப்பதும் சிறப்பு. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சுக களத்திர ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. சட்டத்துறைக்கு காரகரான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கிறார். உங்கள் தந்தையின் சொத்து உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும். சட்டத்துறையிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சனிபகவான் வலுத்துள்ளதால் தீர்க்காயுள் உண்டு. திருட்டுபோன நகை திரும்ப கிடைக்கும் வாய்ப்பு குறைவு. பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.