என் மகன் பாடத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வாரா? மேற்படிப்பில் எந்தப் பாடத்தை எடுத்துப் படிக்க வைக்கலாம்? உடல்நிலை எவ்வாறு இருக்கும்? -  வாசகர், கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். கல்வி ஸ்தானாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று விபரீத


உங்கள் மகனுக்கு மீன லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். கல்வி ஸ்தானாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று விபரீத ராஜயோகம் பெற்றுள்ள அஷ்டமாதிபதியான சுக்கிரபகவானுடன் இணைந்து இருக்கிறார். புத, சுக்கிர பகவான்களின் இணைவு மஹாவிஷ்ணு, மஹாலட்சுமி தெய்வங்களின் இணைவு என்று கூறவேண்டும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் லக்னாதிபதியான குருபகவானும் ஆட்சி பெற்ற தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சனிபகவானும் இணைந்திருக்கிறார்கள். நவாம்சத்தில் குருபகவானும் சனிபகவானும் உச்சம் பெற்றிருக்கிறார்கள். தர்ம கர்மாதிபதிகள் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருப்பதும் பாக்கிய ஸ்தானத்தைப் பாக்கியாதிபதியும் தொழில் ஸ்தானத்தை தொழில் ஸ்தானாதிபதியும் பார்வை செய்வது சிறப்பான தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் அவரை மேற்படிப்பாக மேலாண்மைத் துறையில் படிக்க வைக்கவும். அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அவருக்கு கல்வியில் நாட்டம் கூடும். நல்லபடியாக பட்ட படிப்பை முடித்து மேல் படிப்பையும் முடித்துவிடுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும். மற்றபடி உடல் ஆரோக்கியம் சீராகவே தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com