உங்களுக்கு மகர லக்னம், கடக ராசி. லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானாலும் லாபாதிபதிகளாலும் பார்க்கப்படுகிறார். தைரிய ஸ்தானமும் நான்கு கிரகங்களால் சூழப்பட்டுள்ளது. தற்சமயம், குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணிய, தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.