எனக்கு எப்போது நிரந்தரமான வேலை கிடைக்கும்? சொந்தமாக வீடு கட்டும் யோகம் உண்டா? - வாசகர், நாமக்கல்

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தர்மகர்மாதிபதிகள் தொழில் ஸ்தானத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தர்மகர்மாதிபதிகள் தொழில் ஸ்தானத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள். லக்னாதிபதியும் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவருடன் சந்திர, சனிபகவான்களும் இணைந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானத்தில் லாபாதிபதி நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தொழில் ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் அயன ஸ்தானத்திலும் ஏழு கிரகங்கள் இருப்பது சிறப்பாகும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நிரந்தர அரசு வேலை அமையும். நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி வடக்கு பார்த்த பூமியில் வீடு கட்டலாம். பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. தொடர்வதும் உச்சம் பெற்றுள்ள சனிபகவானின் தசையாக உள்ளதால் எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com