உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி. கல்வி ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அவருக்கு கணினி சம்பந்தப்பட்ட படிப்பு ஏற்றது. சர்ப்ப தோஷம் உள்ளது. செவ்வாய்பகவான் எட்டாம் வீட்டில் கேதுபகவானுடன் இருப்பதால் செவ்வாய் தோஷம் குறைகிறது. களத்திர ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் மறைவு பெறுகிறது என்கிற ரீதியில் பொருத்தம் பார்க்க வேண்டுமே அன்றி செவ்வாய்பகவான் தோஷம் பெற்று எட்டாம் வீட்டில் இருக்கிறார் என்று கொள்ளக்கூடாது. அதோடு குருபகவானின் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது படிவதும் சிறப்பாகும். மற்றபடி நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் சரியானது. அவருக்கு 24- ஆம் வயதில் பெற்றோர் நிச்சயித்த வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.