பி.காம் படித்துள்ள என் மகள் மத்திய மாநில அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதி உள்ளார். அரசுப்பணி கிடைக்குமா? அரசாங்கத்தில் உயர் பதவியிலுள்ள வரன் அமையுமா? - வாசகர், கோயம்புத்தூர்

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி. பாக்கியாதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது.

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி. பாக்கியாதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சூரிய, சுக்கிரபகவான்கள் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். தற்சமயம் குருபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அதனால் அவரை இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதச் சொல்லவும். சிறப்பான வேலை கிடைக்கும். களத்திர ஸ்தானமும் மாங்கல்ய ஸ்தானமும் வலுவாக உள்ளதால் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com