என் மகளுக்கு அடிக்கடி கோபம் வருகிறது. தற்போது வரன் பார்த்து வருகிறேன். இன்னும் அமையவில்லை. எப்போது திருமணம் செய்யலாம்? மாங்கல்ய ஸ்தானம் எவ்வாறு உள்ளது? குழந்தைகள் உள்ளனவா? வரன் எவ்வாறு அமையும்? - வாசகர், மேட்டூர்
By DIN | Published On : 26th April 2019 02:36 PM | Last Updated : 26th April 2019 02:36 PM | அ+அ அ- |

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் களத்திராதிபதி மற்றும் லாபாதிபதிகளுடன் இணைந்திருகிறார். தற்சமயம் அஷ்டமாதிபதியின் தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.