எனது இரண்டு பேத்திகளும் பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டு படித்து வருகிறார்கள். முதல் பேத்தியின் ஜாதகத்தில் 4- இல் ராகு இருப்பது மனக்கலக்கத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலம், குடும்பம், தொழில் எவ்வாறு இருக்கும்? இரண்டாவது பேத்தியின் ஜாதக நிலை எவ்வாறு உள்ளது? - வாசகர், புதுக்கோட்டை

உங்கள் பெரிய பேத்திக்கு மீன லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று சனிபகவானுடன் இணைந்திருக்கிறார்

உங்கள் பெரிய பேத்திக்கு மீன லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் தைரிய ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். சுக ஸ்தானத்தில் ராகுபகவான் குருபகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் ராகுபகவானால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அதோடு ராகுபகவானுக்கு வீடு கொடுத்த புதபகவான் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று இருப்பதும் சிறப்பு. அதனால் ராகுமகா தசை அவருக்கு நன்மைகளையே செய்தது என்று பார்க்கிறோம்.தொடர்வதும் லக்னாதிபதியான குருபகவானின் தசையாக இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பொறியியல் துறையில் படிக்க வைக்கலாம். உங்கள் இரண்டாம் பேத்திக்கு ரிஷப லக்னம், பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி. லாப ஸ்தானத்தில் லக்னாதிபதி உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான புதபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் பெறுகிறார். தற்சமயம் தர்மகர்மாதிபதியான சனிபகவானின் தசை நடப்பதும் சிறப்பாகும். இவரை பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்க வைக்கலாம். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com