சுடச்சுட

    

    எனது மகளுக்கு 31 வயதாகிறது. வரன் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. எப்போது திருமணம் கைகூடும்? எதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?  - வாசகர், மறைமலை நகர்

    By DIN  |   Published on : 09th August 2019 10:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தைக் கொடுக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி ஆறாம் வீட்டில் மறைவு பெற்று களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். களத்திர ஸ்தானத்தில் சுகாதிபதி மற்றும் தர்மகர்மாதிபதி ஆகியோர் இணைந்திருக்கிறார். தற்சமயம் அஷ்டம லாபாதிபதியான குருபகவானின் தசையில் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் புக்தி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai