Enable Javscript for better performance
என் மகனுக்கு எப்பொழுது நிரந்தர வேலை கிடைக்கும்? - செல்வராஜ்- Dinamani

சுடச்சுட

    

    என் மகனுக்கு எப்பொழுது நிரந்தர வேலை கிடைக்கும்?  - செல்வராஜ்

    By DIN  |   Published on : 09th August 2019 10:11 AM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் மகனுக்கு மீன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குடும்ப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சுக, களத்திர ஸ்தானாதிபதியான புதபகவானையும் சுக ஸ்தானத்தையும், ஆறாம் வீட்டையும் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. தைரிய ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று, விபரீத ராஜயோகம் பெற்றுள்ள சூரியபகவான் மற்றும் ராகுபகவானுடன் இணைந்து இருக்கிறார். ஆயுள்காரகரான சனிபகவான் செவ்வாய்பகவானுடன் இணைந்து அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். தற்சமயம் சூரியபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவரின் தகுதிக்கேற்ற நிரந்தர வேலை கிடைத்துவிடும். தொடரும் சந்திர, செவ்வாய் பகவான்களின் தசையும் சிறப்பாகவே தொடரும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    kattana sevai