Enable Javscript for better performance
என் மகனுக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. விவாக ப்ராப்தி உண்டா? நிறைய பரிகாரங்கள் செய்துள- Dinamani

சுடச்சுட

    

    என் மகனுக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. விவாக ப்ராப்தி உண்டா? நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்?  - வாசகர், ராமாபுரம்

    By DIN  |   Published on : 09th August 2019 10:12 AM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் மகனுக்கு மகர லக்னம், மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி ராசியில் மறைந்திருந்தாலும் நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். லக்ன, குடும்பாதிபதியான சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கிறார். சுகாதிபதி லக்னத்தில் உச்சம் பெற்று வர்கோத்தமத்திலும் இருப்பதால் பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதும் பாக்கியாதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்தில் விபரீத ராஜயோகம் பெற்று களத்திர ஸ்தானாதிபதியாலும் சுக ஸ்தானத்திலுள்ள குருபகவானாலும் பார்க்கப் படுவதால் உறுதியாகத் திருமணம் கைகூடும் என்று கூற வேண்டும். அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தற்சமயம் நடக்கும் ராகுபகவானின் புக்தியிலேயே திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

    kattana sevai