Enable Javscript for better performance
என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? தனியார் மருத்துவமனையில் விரிவுரையாளராகப் பணி செய்கிறார்.- Dinamani

சுடச்சுட

    

    என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? தனியார் மருத்துவமனையில் விரிவுரையாளராகப் பணி செய்கிறார். தோஷம் ஏதும் உள்ளதா?  - வாசகர், கடலூர்

    By DIN  |   Published on : 09th August 2019 10:10 AM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னாதிபதி களத்திர ஸ்தானாதிபதியுடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். இவர்களை குருபகவான் குடும்ப ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார். பூர்வபுண்ணியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். சுக, பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் சந்திரபகவானுடன் இணைந்து இருப்பதும் சிறப்பு. அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அவருக்கு அரசு வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணமும் கைகூடும். அந்நிய உறவில் வரன் தெற்கு, தென்மேற்கு திசையிலிருந்து அமைவார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரச் சொல்லவும். மற்றபடி எதிர்காலம், குடும்ப வாழ்க்கை, புத்திர பாக்கியம் சீராகவே அமையும்.

    kattana sevai