சுடச்சுட

    

    தற்போது உடலளவிலும் மனதளவிலும் என் மகன் பலவீனமடைந்துள்ளான். எப்போது பூரண நலம் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பார்?  - வாசகர், கொளத்தூர்

    By DIN  |   Published on : 09th August 2019 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உங்கள் மகனுக்கு மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் குடும்பாதிபதி சனிபகவான் ஆறாம் வீட்டில் வர்கோத்தமத்தில் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியுடன் இணைந்து இருக்கிறார். இவர்களை தர்மகர்மாதிபதிகள் அயன ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார்கள். இதனால் மூன்று திரிகோணாதிபதிகளும் இணைந்திருக்கிறார்கள் என்று கூறவேண்டும். தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானின் தசை நடக்கிறது. குருபகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் அஷ்டமாதிபதியான சூரியபகவானின் மீதும், தைரியம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானங்களின் மீதும் படிகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு அவரின் உடல், மன உபாதைகள் நீங்கி முழுமையான ஆரோக்கியத்தைப் பெறுவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai