Enable Javscript for better performance
பி.இ., படித்துள்ள என் மகன் மத்திய அரசு போட்டித் தேர்வு எழுதி உள்ளார். சிவில் இன்ஜினியரிங் துறையில் வ- Dinamani

சுடச்சுட

    

    பி.இ., படித்துள்ள என் மகன் மத்திய அரசு போட்டித் தேர்வு எழுதி உள்ளார். சிவில் இன்ஜினியரிங் துறையில் வாய்ப்பு அமையுமா? அல்லது ஜவுளி தொழிலில் ஈடுபட வைக்கலாமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?  - வாசகர், ஈரோடு

    By DIN  |   Published on : 09th August 2019 10:12 AM  |   அ+அ அ-   |    |  

    உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னம் மற்றும் கல்வி ஸ்தானாதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள குருபகவானுடன் இணைந்திருக்கிறார். செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்று தைரிய ஸ்தானாதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சனிபகவான் சச மகா யோகத்தைப் பெற்று பூர்வபுண்ணியாதிபதி மற்றும் குடும்பாதிபதியுடன் இணைந்திருக்கிறார். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதாலும் தற்சமயம் சனிபகவானின் தசை நடப்பதாலும் சிறப்பான அரசு அல்லது அரது சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் கிடைக்கும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

    kattana sevai